‘அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்’

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

‘அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்’

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயில் சமபந்தி விருந்தில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘ வேலூர் மாவட்டத்தை பிரித்தது போன்று, நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்கள் உருவாக்கப்படும். மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிப்பது பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்’ என்றார்.

‘அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்’

கடப்பாரையை சாப்பிட்டு விட்டு சுக்கு கசாயம் சாப்பிடுவது திமுகதான் என்று, நீட் விவகாரத்துக்காக சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இந்த பதிலை அளித்துள்ளார்.

மேலும், சாதிகள் இல்லை என்பதே அரசின் நிலை; பள்ளிக்கல்வியின் சுற்றறிக்கையை கனிமொழி வரவேற்றது நல்ல விஷயம் என்றும், செவி கொடுத்து விட்டு செவி சாய்க்கும் அரசு தமிழகத்தில்தான் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP