அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது: ஸ்டாலின்

அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளதாக, ஒட்டப்பிடாரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது: ஸ்டாலின்

அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று உளவுத்துறை தகவல் வந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒட்டப்பிடாரத்தின் கோரம்பள்ளம் பகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று உளவுத் துறை தகவல் வந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை  நிரந்தரமாக மூடப்படும். தூத்துக்குடியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் குடிநீர் பிரச்னை வந்திருக்காது’ என்று ஸ்டாலின் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP