8 வழி சாலை திட்டம் மக்களுக்கானது அல்ல: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

8 வழி சாலை திட்டம் மக்களின் பயன்பாட்டிற்காக இல்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே திட்டத்தை செயல்படுத்த நினைப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

8 வழி சாலை திட்டம் மக்களுக்கானது அல்ல: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

8 வழி சாலை திட்டம் மக்களின் பயன்பாட்டிற்கானது  இல்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே திட்டத்தை செயல்படுத்த நினைப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, " சேலம் உருக்காலை காங்கிரஸ் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட பொதுத்துறை நிறுவனம் என்றும் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் அயராத முயற்சியால் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

ரூ.4000 கோடி மதிப்புடைய சேலம் உருக்காலையை ஒருபோதும் தனியர் நிறுவனத்திற்கு தாரைவார்க்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.  

8 வழி சாலை திட்டம் மக்களின் பயன்பாட்டிற்காக  இல்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே திட்டத்தை செயல்படுத்த நினைப்பதாகவும் கூறினார். மேலும்,  தமிழக முதலமைச்சர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், மக்களுக்கு எதிரான இந்த திட்டங்களை எதிர்த்து மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை என்றும் மாறாக மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார் எனவும் கே.எஸ்.அழகிரி குற்றம்  சாட்டினார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP