வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி: அதிமுக

வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 | 

அந்த அறிக்கையில் மேலும், ‘மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது அதிமுகவை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும். ஜெயலலிதா அளித்து சென்றுள்ள வாக்கு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளதை தேர்தல் முடிவுகள்  காட்டுகின்றன. வேலூர் 46.51 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றிருப்பதன் முக்கியத்துவம் அரசியல் ஆர்வலர்களுக்கு தெரியும்.வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு  வாக்களித்த வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கும், தேர்தலில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP