தமிழக மக்களுக்கு நன்றி; பிரதமர் மோடிக்கு வாழ்த்து - மு.க. ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியும், வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 | 

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மக்களவை தேர்தலில் வெற்றியை நோக்கி செல்லும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்த ஸ்டாலின்,  ஜனநாயக முறைப்படி பிரதமர் மோடி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP