இடைத்தேர்தல் எங்க நடக்குது சொல்லுங்க சார்!

ஆர்கே நகர் பரபரப்பில் 5 சதவீதம் கூட அதிமுகவினரிடையே இல்லை. இதில் வென்றாலும்,தோற்றாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தி சட்டசபைத் தேர்தல் வெற்றியை தக்க வைக்க முடியும் என்று நினைத்துவிட்டார்கள் போல
 | 

இடைத்தேர்தல் எங்க நடக்குது சொல்லுங்க சார்!

சாமியிடம் எந்த கோரிக்கையும் இல்லாவிட்டால், எங்க தொகுதிக்கு இடைத் தேர்தல் வரணும் என்று தமிழக மக்கள் வேண்டிக் கொள்ளும் அளவிற்கு, அதன் தாக்கம் இருந்தது. தீபாவளி நேரத்தில் மின்சாரம் நின்றால், இபி கார்கள் தீபாவளி காசு வாங்க வராங்க என்று பேசிய அதே தமிழகம். 

இடைத்தேர்தல் காலகட்டத்தில் மின்சாரம் நின்று விட்டால், இன்னும் நம்ம வீட்டுக்கு வரவில்லையே என்று எதிர்பார்க்கிறார்கள். இன்னும் இங்கு வரவில்லை அதற்குள் மின்சாரம் வந்து விட்டதே என்று கவலைப்படும் நிலையில் தமிழகம் மாறிவிட்டது.

இடைத் தேர்லை, எடைத் தேர்தலாக மாற்றிய பெருமை திருமங்கலத்திற்கு உண்டு. அதற்கு முன்பு மூக்குத்தி, குங்கும சிமிழ் என்று இருந்தது, ரொக்கம் வழங்கப்படும் என்ற நிலையை அறிமுகம் செய்தது திருமங்கலம். அதன் பின்னர், சிறிது சிறிதாக வளர்ந்து பணமே கொடுக்க வேண்டாம் சும்மா டோக்கன் கொடுங்க போதும் என்ற அளவிற்கு ஆசை ததுப்பி நின்றது.

இந்நிலையில், தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.  இதனால் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம் என்று நினைத்தனர். பணம் கிடைக்காவிட்டாலும், டோக்கன் மட்டுமாவது கிடைக்கும். 

ஏற்கனவே இந்த தொகுதியில் தவணை முறையில் பொருட்களை விற்றவர் தான் எம்எல்ஏ ஆனார், எனவே தீபாவளிக்கு கட்டாயம் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஏமாற்றம் மட்டுமே இதுவரையில் கிடைத்தது. பிரச்சாரம் செய்ததாகவோ, பணம் பிடித்ததாகவோ, இதுவரையில் எந்த செய்தியும் இல்லை. தலைவர்கள் இடைத்தேர்தல் நடக்கிறது என்பதையே மறந்துவிட்டார்கள் போல. இதுவரையில் அவர்கள் பிரச்சாரம் செய்ததாகவே தெரியவில்லை. 

ஆர்கே நகர் பரபரப்பில் 5 சதவீதம் கூட அதிமுகவினரிடையே இல்லை. இதில் வென்றாலும்,தோற்றாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தி சட்டசபைத் தேர்தல் வெற்றியை தக்க வைக்க முடியும் என்று நினைத்துவிட்டார்கள் போல. அல்லது நீங்க ஒன்று, நாங்க ஒன்று என்று திமுக, காங்கிரஸ் இடையே தனித் தனியே பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள் போல. 25 கோடி செலவில் கொள்கை கூட்டணி உருவாகும் நிலையில் இன்னொரு 25 கோடி கொடுத்தால் வெற்றி பெற்றவர் அதிமுக என்று சொல்ல முடியாதா என்று அக்கட்சி நினைக்கிறது போலும்.

திமுக கூட்டணி வெகு மோசம். பிடிக்காத சாப்பாட்டை நண்பனை சாப்பிடச் சொல்லி கெஞ்சுவதற்கு இணையாக, நாங்குனேரியை தள்ளிவிட்டது. மோடி பயம் காட்டலாம்  என்றால், பாஜ இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறதா இல்லையா என்பது சந்தேகம். 

இன்னொருபுறம் இதில் காசை விட்டால் இன்னும் ஒரு ஆண்டுதான். அதற்குள் சம்பாதிக்க முடியாது. கவுரவம், லோக்சா தேர்தல்,அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவ்வளவு இடங்களை அள்ளியும் ஒரு கவுரவம் கூட கிடைக்க வில்லை. இத்தனைக்கும் இதுவே கருணாநிதியா இருந்தால் இப்படி இருக்குமா என்று கேட்கிறார்கள். 

மத்தியில் மைனாரிட்டி அரசு வரும் அதில் இத்தனை எம்பிக்ளை வைத்து வரும்படி பார்க்கலாம் என்ற திமுகவின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. இதனால் அவர்களுக்கும் பிரச்சாரம் சொல்லிக் கொள்ளும் படியாக செய்யவில்லை.

இது  2 கட்சிகளுக்குமே வெற்றி, தோல்வி அடைந்தால் பரவாயில்லை என்ற நிலையில்தான் தேர்தல் நடப்பதாக தெரிகிறது.

என்ன செய்வது எல்லாவற்றிக்கும் அதிஷ்டம் இருக்க வேண்டும். அடுத்து எங்காவது இடைத்தேர்தல் நடக்கிறதா சொல்லுங்க சார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP