விஜயகாந்திடம் பாடம் கேளுங்கள் தலைவர்களே!

பிரதமர் குப்பை பொறுக்குகிறார்களே நீங்கள் அது போல செய்வீர்களா என்று நிகழ்ச்சி நடத்தி இருந்தால் அதில் ஒரு சதவீதமாவது பலன் கிடைக்கும். அதை விடுத்து மீண்டும் குப்பையாகிறது மகாபலிபுரம் என்று நிகழ்ச்சி நடந்த மறுநாளே அலறத் தொடங்கிவிட்டன ஊடகங்கள்.
 | 

விஜயகாந்திடம் பாடம் கேளுங்கள் தலைவர்களே!

சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நாட்டிற்கு பல விஷயங்களை சொன்னாலும், சொல்லாவிட்டாலும், தனி நபர்களுக்கு அதில் எந்த தகவலும் இல்லை. ஏதோ பெயர் தெரியாத நாட்டில், 300 பேர் மரணம் என்று செய்தி வந்தால் என்ன உணர்வு இருக்குமோ, அது போன்றது தான் இந்த சந்திப்பின் பலனும். 

ஆனாலும் ஒவ்வொரு தனி  நபரும் இந்த சந்திப்பை உற்று நோக்குகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன தகவல் தான் பிளக்கிங். இதை அனைவரும் செய்ய முடியும். மோடி கூறுவதற்கு முன்பே, பலர் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். 

பிரதமரே வெறும் கை, காலுடன் குப்பைகளை சேரிக்கிறார். அவருடன் ஒப்பிடும் போது நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்ற மனநிலை ஒவ்வொரு இந்தியனிடமும் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் அவன் வாழும் பகுதி முழுவதும் சுத்தமாகும்.

இந்த நோக்கத்தில், மோடியின் செயலை வரவேற்க வேண்டும். ஆனால், வடையை என்ன சொன்னார்களா அதில் உள்ள துளையை எண்ண சொன்னார்களா என்ற அளவிற்கு ஊடகங்கள், ஒரு சில தலைவர்கள் நடவடிக்கை இருக்கிறது.

பிரதமர் குப்பை பொறுக்குகிறார்களே நீங்கள் அது போல செய்வீர்களா என்று நிகழ்ச்சி நடத்தி இருந்தால் அதில் ஒரு சதவீதமாவது பலன் கிடைக்கும். அதை விடுத்து மீண்டும் குப்பையாகிறது மகாபலிபுரம் என்று நிகழ்ச்சி நடந்த மறுநாளே அலறத் தொடங்கிவிட்டன ஊடகங்கள்.

பிரதமரே துாய்மையை கடைபிடிக்கிறார் நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டியவர்கள், அதற்கு சிறிது முயற்சிக்க வில்லை.

மகாபலிபுரம் நிகழ்ச்சி குறித்து பலர் விமர்சனம் செய்திருந்தாலும், காங்கிரஸ் தலைவர் அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரின் கருத்துக்கள் முக்கியமானது. காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்த நிகழ்ச்சியை குறித்து பேசும் போது, அவ்வளவு துாய்மையான பகுதியில் குப்பை எப்படி வந்தது. 

தமிழக அரசின் கவனக்குறைவா, நாடகமா என்று விமர்சனம் செய்கிறார். இவரின் விமர்சனத்தின் அடிப்படையில் பார்த்தால், அவருக்கு கடல் பற்றி எதுவுமே தெரியவில்லை. தரையில் தான் குப்பைகள் அகற்றப்பட்டன. கடலில் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

அவரின் வாதப்படியே அது நாடகம் என்றால் கூட, பிரதமர் வலியுறுத்துவது துாய்மையை தான். பாஜகவிற்கு ஓட்டு போட வலியுறுத்தி அல்ல. காந்தி ராட்டை சுற்றியதும், அரிஜன சேவை செய்ததும் கூட அவரைப் பார்த்து மற்றவர்கள் பின் தொடர வேண்டும் என்பதற்காத்தான். அது போலவே மற்றவர்களும் செய்தனர். 

இதனால் தலித்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் ஒரு இணக்கமான வளர்ச்சி ஏற்பட்டது. அதற்கு இணையாகத்தான் மோடி குப்பைகளை அற்றியது. தன் கருத்து மூலம் அழகிரி, பிரதமர் நடிக்கிறார் இதனால் நீங்கள் உங்களை சுற்றி குப்பை அல்லாதீர்கள் என கூறுவது தானே அர்த்தம். இவரின் கருத்தால் நாட்டிற்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது.


அதே நேரத்தில் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக விஜயகாந்தின் விமர்சனம் இருந்தது. வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி தமிழகத்தின் புகழை உலகு எங்கும் பரப்பி உள்ளார். அவரே துாய்மை செய்ததன் மூலம் துாய்மை இந்தியா திட்டத்தில் மோடி எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரிகிறது. 

இந்த நிகழ்ச்சியால் மகாபலிபுரம் துாய்மையான நகரமாக மாறிவிட்டது. அதை பாராமரிக்க வேண்டியது மக்களின் கடமை என்கிறார். இது தான் தலைவர் பாங்கு. மக்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை விஜயகாந்த் விளங்க வைக்கிறார்.

ஆனால் நம்முடைய துர் அதிஷ்டம் விஜயகாந்தை காமெடியானகவும், அழகிரி போன்றவர்களை மிகச்சிறந்த தலைவராகவும் ஊடங்கள் அடையாளம் காட்டின. இந்த ஊடகங்களின் மாயையில் மக்கள் சிக்காமல் தங்கள் கடமையை நேர்மையாக செய்ய வேண்டும் என்பதுதான் தேச பக்கதர்களின் எதிர்பார்ப்பு. இது நிறைவேறுமா என்பதை காலம் தான் காட்ட வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP