தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். 

அந்த பேட்டியில், கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது; ஆறு மொழிகள் படித்தாக வேண்டும். பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது உலக அரங்கில் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்திய தாக்கத்தை விட 100 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP