தமிழர்கள் புலியை போன்றவர்கள்:மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தமிழர்கள் புலியை போன்றவர்கள்; நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு குரல்கொடுப்பது பெருமையாக உள்ளது என்று, சென்னையில் கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசினார்.
 | 

மேலும் அந்த விழாவில் பேசிய அவர், ‘கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வதிகாரத்தை எதிர்த்து போராடுவோம். அவர் தற்போது இல்லையென்றாலும் நமது இதயங்களை வென்றவர் அவர். மாநில உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் கருணாநிதி. தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி’ என்று புகழாரம் சூட்டினார் மம்தா பானர்ஜி. 

மேலும், ‘எதிர்காலத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன். தமிழில் வணக்கம் என்ற வார்த்தையை கூறுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் கூறி தனது உரையை நிறைவு செய்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP