தெலங்கானா ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தர்ராஜன் பதவியேற்கிறார்.
 | 

தெலங்கானா ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கிறார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழிசைக்கு எதிர்க்கட்சி உள்பட பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்ட தமிழிசை வருகிற 8-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கிறார்.

முன்னதாக,  டெல்லியில் உள்ள தெலங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி, தமிழிசை சவுந்தர்ராஜனை சந்தித்து நியமன ஆணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP