அன்புமணிக்கு நேரடி சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!

யார் உண்மையான அரசியல்வாதி, யாருக்கு தகுதி இருக்கிறது என்பதை அன்புமணியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அன்புமணிக்கு சவால் விட்டுள்ளார்.
 | 

அன்புமணிக்கு நேரடி சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!

யார் உண்மையான அரசியல்வாதி, யாருக்கு தகுதி இருக்கிறது என்பதை நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அன்புமணிக்கு சவால் விட்டுள்ளார்.  

செங்கல்பட்டு அருகே நடந்த பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, பா.ம.க நிறுவனர் ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதைக் கண்டித்து பா.ம.க-வினர் தமிழக பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, பா.ம.க-வினருக்கு எதிராக பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்த வந்த பா.ம.கவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது பஸ் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. 

இதையடுத்து இன்று பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வருவார். சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை தமிழக நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம். இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம், எய்ம்ஸ் என தமிழகத்துக்கு மத்திய அரசு நல்ல பல திட்டங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. 

ஆளுநரின் பணியைத் தடுத்தால் ஏழு ஆண்டு தண்டனை கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதை, சட்டரீதியாக தனக்குள்ள அதிகாரம் பற்றி ஆளுநர் நடுநிலையுடன் தான் அறிக்கை அளித்துள்ளார். 

பிரிவினைவாத பின்னணியில் உள்ளவர்கள் தான் அரசு திட்டங்களை எதிர்கிறார்கள். மக்களுக்கான போராட்டத்தை நடத்துவது யார் என்பது அரசாங்காத்திற்கு தெரியும். பிரிவினைவாதிகளை தான் அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இவர்களெல்லாம் கைது செய்வது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் உள்ளது. ஒரு சிலரை கைது செய்துள்ளனர். இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வெண்டும்.

சேலத்தை ஒரு தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்ற சுயநலத்திட்டங்களை இவர்கள் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் அக்கறை இருக்கிறது. மத்திய மாநில அரசுக்கும் அக்கறை இருக்கிறது. அரசு மக்களுக்கு எதிரானவர்கள் போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். போராட்டங்களில் தவறில்லை. ஆனால் மக்களின் உயிரை பலி வாங்கும் போராட்டங்களாக தான் இருக்கக்கூடாது. 

நான் அன்புமணி போல மரியாதைக்குறைவாக பேச மாட்டேன். 20 ஆண்டுக்கால உழைப்புக்கு பின்பு அறிவாற்றலும் தேசிய பண்பும் இருப்பதால் தான் இன்று தேசிய கட்சியின் மாநிலத் தலைவராகி இருக்கிறேன். நானும் அரசியல்வாதியின் மகள் தான். ஆனால் அதனை பயன்படுத்தி நான் முன்னேறவில்லை. முழுக்க என்னுடைய உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். 

எனவே எனக்கு தகுதி இருக்கிறது என்று கேட்பதற்கு அன்புமணிக்கு தகுதி இருக்கிறதா என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர் அமைச்சர்களாக இருந்தபோது எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை. அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் வரவில்லை என்பது வரலாற்று உண்மை. இதை தான் நான் பதிவிட்டேன். இதில் தவறு இருந்தால் அவர்கள் பதவியில் இருந்த போது எடுத்த முயற்சிகளை கூறவேண்டும். அதைசெய்யாமல் தகுதியை பற்றி பேசுகிறார்கள். அவர்கள் எல்லாம் எத்தனை பேரை காவு வாங்கி விட்டு அமைச்சரானார்கள். ராமதாஸ் ஒரு முறை எங்கள் வீட்டில் இருந்து வேறு யாராவது சட்டப் பேரவைக்கோ நாடாளுமன்றத்திற்கோ சென்றால் சவுக்கால் அடிக்க சொன்னார். இப்போது நிலை என்ன? 

ஒரு கருத்துக்கு பதில் கருத்து  கூறுங்கள். அன்புமணியுடன் நான் விவாதிக்க தயார். யார் உண்மையான அரசியல்வாதி என்பதை பார்ப்போம். என் தகுதி மீது எனக்கும், என் கட்சிக்கும் நம்பிக்கை இருக்கிறது. தமிழக மக்களும் என்னை நம்புகிறார்கள். பா.ம.க தலைவர் ஜி.கே.மணி நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். நான் அப்படி எதையும் தவறாக கூறவில்லை. தமிழகத்தில் நாகரீமான அரசியல் வேண்டும்" என்றார். 

பின்னர் நேற்று நடந்த கூட்டத்தில் தமிழிசையை தாக்க ஒருவர் முயற்சித்தது குறித்து கேட்டபோது, "பெண் அரசியல்வாதி, ஆண் அரசியல் வாதி என்று பிரிக்க விரும்பவில்லை. பொது வெளியில்  இருக்கும் போது எனது உயிர் பற்றி நான் கவலைப்படுவதில்லை" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP