தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 | 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு நடைபெற்றது. மேலும், சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரங்கல் வாசிப்புக்கு பெற்ற சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 1-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் என சபாநாயகர் அறிவித்தார். 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்குப் பிறகு திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தனித்தனியே அந்தந்த கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP