தமிழக அரசும் நதிநீர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

மத்திய அரசு போன்று தமிழக அரசும் நதிநீர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
 | 

தமிழக அரசும் நதிநீர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

மத்திய அரசு போன்று தமிழக அரசும் நதிநீர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். 

மதுரையில் நடைபெறும் வைகைநதிப் பெருவிழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில் "நதிகளை புனிதமாக கருதவும், நதிகளை பாதுகாக்கவும் வைகைப் பெருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மத்திய அரசு நதிநீருக்கென ஒரு அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது. அதேபோன்று தமிழக அரசும் நதிநீர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு மட்டுமே எனக் குறிப்பிட்டார்.

மேலும், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல் நக்சலைட்டுகள் தடுத்து வருவதாகவும், நதிநீரை இணைத்து விட்டால் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது எனவும் கூறினார். 

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்கிற நூலில் சிவனை பைத்தியக்காரன் என எழுதி உள்ளது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். மேலும், தமிழகத்தை பிரிவினை மாநிலமாக மாற்ற ஐ.எஸ்.எஸ் அமைப்பு முயன்று வருவதாக குறிப்பிட்ட அவர், என்.ஐ.ஏ அமைப்புக்கு அதிகாரம் கொடுப்பது தொடர்பான சட்டத்தை திமுக ஆதரித்து விட்டு, தற்போது சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் பேசி வருவதாக கூறினார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அறநிலையத்துறை மாவட்டந்தோறும் 1000 விநாயகர் சிலைகளை வழங்க வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த பந்தல் அமைத்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP