மகனுக்கு தமிழகம்... மருமகனுக்கு டெல்லி... கனிமொழிக்கு கல்தா... மு.க.ஸ்டாலின் பலே அரசியல்!

தனது மருமகனை டெல்லி அரசியலுக்கு அனுப்பினார் கருணாநிதி. அதே பாணியில் தனது மருமகனான சபரீசனை டெல்லிக்கு அனுப்ப தயாராகி விட்டார் மு.க.ஸ்டாலின். இதனால், கனிமொழியின் நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கிறது.
 | 

மகனுக்கு தமிழகம்... மருமகனுக்கு டெல்லி... கனிமொழிக்கு கல்தா... மு.க.ஸ்டாலின் பலே அரசியல்!

ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருந்தவர் தி.மு.கவின் மறைந்த தலைவர் மு.கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு அரசியல் சுழல வேண்டும் என்பதில், எப்போதும் கவனமாக இருந்தவர். அதே பாணியை கட்சியில் கையாண்டு வருகிறார் இப்போதைய தலைவரான மு.க.ஸ்டாலின். தி.மு.க தன் (தன் மகன், மருமகன்) குடும்பத்தைச் சுற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். கருணாநிதிக்கு மனசாட்சி அவரது மருமகன் முரசொலி மாறன் என்றால் ஸ்டாலினுக்கு அவரது மருமகன் சபரீசன்!

மகனுக்கு தமிழகம்... மருமகனுக்கு டெல்லி... கனிமொழிக்கு கல்தா... மு.க.ஸ்டாலின் பலே அரசியல்!

தனது மருமகனை டெல்லி அரசியலுக்கு அனுப்பினார் கருணாநிதி. அதே பாணியில் தனது மருமகனான சபரீசனை டெல்லிக்கு அனுப்ப தயாராகி விட்டார் மு.க.ஸ்டாலின். அண்ணன் டெல்லி அரசியலுக்கு தன்னை அனுப்புவார் என நம்பி இருந்த கனிமொழியின் நம்பிக்கை சின்னாபின்னமாகப் போயிருக்கிறது. திமுக இனி கருணாநிதி குடும்பத்து சொத்தல்ல.. மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமேயான சொத்து.  கனிமொழியை மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவது குறித்து ,..... என்கிற தலைப்பில் எழுதி இருந்தோம். 

மகனுக்கு தமிழகம்... மருமகனுக்கு டெல்லி... கனிமொழிக்கு கல்தா... மு.க.ஸ்டாலின் பலே அரசியல்!

டெல்லி அரசியலை கனிமொழி கவனித்துக் கொள்வார் என திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் சில  தாபங்கள் இருக்கின்றன. 2ஜி வழக்கில் கனிமொழியை நீதிமன்றம் விடுதலை செய்தாலும் இன்னும் சிலர் அதனை நம்புவதாக இல்லை. அத்தோடு, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியில் ஆட்சி அமைய முக்கியப் பங்கு வகிக்கும். அதனை தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கையாண்டால் சரியாக இருக்கும் எனக் கருதும் ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனை டெல்லி அரசியலை கவனிக்க சொல்லி இருக்கிறார். திமுக தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலின்போதும், சட்டசபை தேர்தலின்போதும் சபரீசன் காட்டிய தீவிரத்தை கண்டு ஸ்டாலினே ஆச்சர்யப்பட்டு அசந்து போனாரர்.

மகனுக்கு தமிழகம்... மருமகனுக்கு டெல்லி... கனிமொழிக்கு கல்தா... மு.க.ஸ்டாலின் பலே அரசியல்!

தேமுதிகவை -திமுக கூட்டணியில் கொண்டு வர சபரீசன் எடுத்த நடவடிக்கைகள் தோற்றுப்போனாலும்  அவர் பட்டது பெரும்பாடு. இந்த நிலையில், தற்போதும் திமுகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சபரீசன் உட்பட ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினெட் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம். இதனால், கருணாநிதி பாணியை பின்பற்றி தம்முடைய மருமகன் சபரீசனை மனசாட்சியாக்கி  செயல்பட விரும்புகிறாராம் ஸ்டாலின். இதற்காகவே, சபரீசனை மாநிலங்களவை எம்பி ஆக்க திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். அதாவது மருமகன் சபரீசன் டெல்லி அரசியலுக்கும், மகன் உதயநிதியை தமிழக அரசியலுக்கும் தயார்படுத்த முடிவெடுத்து விட்டார் ஸ்டாலின்’’ என்கிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP