ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் திடீர் பதற்றம்

சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும் ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில், இரு வேறு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால், அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.
 | 

ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் திடீர் பதற்றம்

சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும் ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில், இரு வேறு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால், அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. 

மக்களவை தேர்தலும் சேர்த்து, தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம்பூர் சட்டபை தொகுதியில், அமமுக வேட்பாளர் கார் மீது மாற்றுக் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால், கோபமுற்ற அமமுகவினர், எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தை முயன்ற போலீசார் மீது சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதே போல், குடியாத்தம் தொகுதியிலும், இரு வேறு தரப்பினரிடையே மாேதல் ஏற்பட்டதால், அங்கும் பதற்றமான சூழல் நிலவியது. 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP