சுபஸ்ரீ வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது 

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனக்கு நெஞ்சுவலி என்று ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, அவர் தலைமறைவானார்.

இதுதொடர்பான வழக்கில், ஜெயகோபாலை கைது செய்ய தாமதம் ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரியில் ஜெயகோபாலை இன்று கைது செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP