மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் சிதறும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
 | 

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் சிதறும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜன.15க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இந்தாண்டு நீட் தோ்வுக்கு தமிழகத்தில் இருந்து 26,000 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர்" என்று தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவிகள் கொலுசு அணிய தடையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP