மாணவர்கள் அரசியலை கண்டு ஒதுங்கி நிற்க கூடாது; கமல்ஹாசன்

மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

மாணவர்கள் அரசியலை கண்டு ஒதுங்கி நிற்க கூடாது; கமல்ஹாசன்

மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என்றும் அரசியல் இன்றி கல்வி, விவசாயம் என எதுவும் முன்னேறாது எனவும் தெரிவித்தார். 

கரைவேட்டி கட்டியவர்கள் அரசியலை பார்த்து கொள்வார்கள் என்று இளைஞர்கள் ஒதுங்கி நின்றதால் தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது. அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முக தன்மை உடையதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். உடகத்துறை என்பது நாளைய தலைமுறைக்கு மிகப்பெரிய ஆயுதம் என்றும் தமிழகத்தில் குடும்ப அரசியலை பிரிக்க முடியாது. ஆனால் அரச பரம்பரை கூடாது என்பதால் தான் ஜனநாயகம் வந்தது என்பதையும் குறிப்பிட்டார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP