ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது: ஓபிஎஸ்

முதலமைச்சர் என்ற கனவுலகில் இருக்கும் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது: ஓபிஎஸ்

முதலமைச்சர் என்ற கனவுலகில் இருக்கும் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி  தொடரும் என்றும், டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் எனவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் வெற்று பெறுவோம் என்ற ஸ்டாலின் கருத்து குறித்து பேசிய அவர், மக்களின் மனநிலையை ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றும், முதலமைச்சர் என்ற கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது என்றும் கூறினார். நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி தொடர்வதாகவும், டிடிவி தினகரன், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து அதிமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP