கயிறாக நினைத்து பாம்பை பிடித்த மு.க.ஸ்டாலின்... துடிதுடித்த திருமா- வைகோ!

பேருந்தில் இடம்பிடிக்காத குறையாக, திருமாவளவனும், வைகோவும் போட்டி போட்டு திமுக கூட்டணியில் துண்டு போட்டுள்ளனர். இந்த நிலையில் கயிரென நினைத்து பாம்பை பிடித்த கதையாகி இருக்கிறது மு.க.ஸ்டாலினின் நிலைமை.
 | 

கயிறாக நினைத்து பாம்பை பிடித்த மு.க.ஸ்டாலின்... துடிதுடித்த திருமா- வைகோ!

பேருந்தில் இடம்பிடிக்காத குறையாக, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் போட்டி போட்டுக் கொண்டு திமுக கூட்டணியில் துண்டு போட்டுள்ளனர்.

திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் துரைமுருகன் இருந்தாலும், ஸ்டாலின் அனுமதி இல்லாமல் கூட்டணி குறித்து தன்னிச்சையாக பேச முடியாது. திமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே, ஸ்டாலினின் கண்ணசைவிற்கு ஏற்றார் போலத்தான் நடத்தப்படுகின்றன.  இந்த நிலையில், துரைமுருகன் ஏன் வைகோவையும், திருமாவளவனையும் பேட்டி மூலம் வம்பிக்கிழுத்தார். எதற்காக இந்த நாடகம்? தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம், “ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் சந்திக்கிறார். அதிமுக அமைச்சர்களின் புயல் நிவாரண நடவடிக்கைகளை வைகோ பாராட்டுகிறார். திமுக நட்பில் இருந்து கொண்டு, எதிர் தரப்பில் இருப்பவர்களுடன் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். இது ஸ்டாலினை கடுமையாக வெறுப்பேற்றிவிட்டது. அதற்காகத் தான், ‘ஒன்று எங்களோடு நில்லுங்கள். இல்லையென்றால் விலகிவிடுங்கள்’ என துரைமுருகன் மூலமாக செக் வைத்தார். பதறிப் போன இருவரும், தேடி வந்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இனி, தி.மு.க.வுடன் தான் பயணப்பட வேண்டியதிருக்கும். அதனையொட்டியே ’’மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்’’ என வைகோ வளைந்து கொடுத்துள்ளார். 

கயிறாக நினைத்து பாம்பை பிடித்த மு.க.ஸ்டாலின்... துடிதுடித்த திருமா- வைகோ!

வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு 25, காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்ந்து 10, மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று என தொகுதிகள் பிரிக்கலாம் என ஸ்டாலின் கருதுகிறார். ஒரு தொகுதி போதாது என வைகோவும், திருமாவளவனும் முரண்டு பிடிக்கிறார்கள். திமுகவை மிரட்டுவதற்காக எதிர்த் தரப்பிடம் வம்படியாக பேசி வந்தார்கள். இதற்காகத் தான் துரைமுருகன் அஸ்திரத்தை ஸ்டாலின் ஏவியதாக சிலாகிக்கிறது திமுக தரப்பு.

இது சாணக்கியமாக இருந்தாலும், ஆபத்தும் இருக்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, 35 தொகுதிகளை கருணாநிதியிடம் கேட்டார் வைகோ. அவர் மறுக்கவே, தன்னை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கரம் கோர்த்தார். அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், அறுதி பெரும்பான்மையோடு இல்லை. பாமக தலைவர் ராமதாஸின் மிரட்டல்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் பந்தாவிற்கும் பயந்தே ஆட்சியை நகர்த்த வேண்டியதிருந்தது. தன்னை எதிர்த்து மதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் வைகோவையும் கூட்டணிக்குள் வைத்திருந்தால், தனிப்பெருமான்மை கிடைத்திருக்கக் கூடும் என திமுக தலைவர்களே பேசினர்.

கயிறாக நினைத்து பாம்பை பிடித்த மு.க.ஸ்டாலின்... துடிதுடித்த திருமா- வைகோ!

2016 தேர்தலில் தொகுதி உடன்படிக்கைக்கு திமுக ஒத்துவராததால், மக்கள் நலக் கூட்டணியை கட்டமைத்தவர் திருமாவளவன். பழம் நழுவி வாயில் விழாதா? என ஏங்கியிருந்த திமுக.வுக்கு கலிங்கப்பட்டி அல்வாவை கொடுத்துவிட்டு, விஜயகாந்தை ம.ந.கூட்டணிக்குள் இணைத்தவர் வைகோ. இவர்கள் இருவருக்கும் வெற்றி பெரும் சக்தி இருக்கிறதோ இல்லையோ, ஒரு கட்சிக்கு எதிராக கூட்டணியை கட்டமைத்து, எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, அக்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்கும் தொடர்புகள் இருக்கிறது.2006, 2016 தேர்தல் போன்று, திமுக கூட்டணியில் போதிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்கிற காரணம் காட்டி, இருவரும் வெளியேறி புதிய கூட்டணியோ, மாற்று கட்சியிலோ இணைந்தால் இழப்பு ஸ்டாலினுக்கு தான்.

அதிமுகவுக்கு 1996 தேர்தல் தந்த மரண அடி, அடுத்து வந்த 1998 பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டுமென்ற நெருக்கடியை ஜெயலலிதாவிற்கு ஏற்படுத்தியது. சைதாப்பேட்டையில் பாமக அலுவலகம், எழும்பூரில் தாயகம் என அவரே கூட்டணிக்காக படிக்கட்டு ஏறி இறங்கினார். அதிமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. 18 எம்.பி.க்களுடன் பிரதமர் வாஜ்பாயையே ஆட்டிப் படைத்தார் ஜெயலலிதா.

கயிறாக நினைத்து பாம்பை பிடித்த மு.க.ஸ்டாலின்... துடிதுடித்த திருமா- வைகோ!

அன்று ஜெயலலிதாவிற்கு இருந்த துடிப்பு, ஜெயித்தாக வேண்டும் என்கிற வெறி, இன்று ஸ்டாலினிடம் இருக்கிறதா? என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும். கூட்டணிக் கட்சிகளை சர்வாதிகாரத்தாலோ, சாணக்கியத்தனத்தாலோ வென்றுவிட முடியாது. அன்பான அரவணைப்பு தான் அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் என்பதை மு.க.ஸ்டாலின் சுதாரித்து புரிந்து கொள்வாரா? இல்லையெனில் கயிரென நினைத்து பாம்பை பிடித்த கதையாகி விடும்!

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP