சுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஸ்டாலின் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 | 

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஸ்டாலின் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை  நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். சொந்த வாகனத்தில் பயணிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும், சரக்கு போக்குவரத்தை நம்பியிருக்கும் வணிகர்களையும் இந்த கட்டண உயர்வு பெரிதும் பாதிக்கும். சுங்கச்சாவடிகளை பயன்படுத்தும் காலம் அதிகரிக்கும்போது கட்டணத்தை குறைப்பதும், ரத்து செய்வதுமே நியாயமாகும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP