திமுகவினர் பேனர்கள், கட் அவுட் வைக்கக்கூடாது: ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
 | 

அறிவுரையை மீறி திமுகவினர் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ’போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை வைக்க கூடாது. நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலோ, கூட்டங்களிலோ பேனர், கட் அவுட் வைத்தால் பங்கேற்க மாட்டேன். திமுக நிர்வாகிகள் அனைவரும் இந்த அறிவுறுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு பேனர்களை விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்கலம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை தொடர்ந்து திமுகவினருக்கு வலியுறுத்தி இந்த அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP