‘ஸ்டாலின் “சீன்” போடுவார்’

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதகையில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதாக விளம்பரம் தேடச் சென்றுள்ளார் என்று, கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
 | 

முதலமைச்சரின் பேட்டியில் மேலும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பார்வையிடுவதாக சீன் போடுவார்; நாங்கள் பாதிப்புகளை சரி செய்வோம். முக்கொம்பு கதவணையில் 71 கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டால் முக்கொம்பு கதவணையில் பாதிப்பு ஏற்படாது. மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும். வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது; தமிழக அரசு துணை நிற்கிறது’ என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP