தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அடிக்கல் நாட்டுவிழா என்ற பெயரில் அதிமுக நாடகமாடியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, தென்னம்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், மத்தியில் பாஜக அரசு இருப்பதால் தான் எடப்படி பழனிசாமி ஆட்டி நீடித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாமல் அதிமுக ஆட்சி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் பேசினார். மேலும், மத்தியில் மோடி ஆட்சி முடிந்தவுடன் தமிழகத்தில் ஈபிஎஸ் ஆட்சி முடியும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP