அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: ஸ்டாலின்

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 | 

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: ஸ்டாலின்

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பக ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் மேலும், ‘தியாகம் செய்து அரசியலுக்கு வந்து மக்கள் தரும் பதவி பொறுப்பை அடைந்தவர்களுக்கே தியாகம் பற்றி தெரியும். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்துகொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம். இழி சொற்கள் எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும். திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை அவருடைய அரசியல் லாப நோக்கில் திருத்தி எழுத எத்தனிக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமானம் எடுத்த பாண்டியராஜன் பேசியது வருத்த கொடுக்கவில்லை’ என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP