பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்: முதல்வர் பழனிசாமி

'பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்: முதல்வர் பழனிசாமி

'பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள மாதிரி ஸ்டாலின் பேசி வருகிறார்' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர், 'அதிமுக மக்களுடைய இயக்கம் இந்த கட்சியும், ஆட்சியும் மக்களுடையது. இது மக்களாட்சி மக்கள் விரும்புகின்ற எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய ஆட்சி. எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்வாரோ அனைத்தையும் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி செய்து வருகிறது. கருணாநிதி உருவாக்கிய திமுக கட்சி நாட்டு மக்களுக்காக உண்டான கட்சி அல்ல. அவரது வீட்டுக்காக உருவாக்கிய கட்சி. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் தேர்தல் என்பது ஒரு விபத்து. ஏகே போஸ் மறைவினால் இந்த பகுதியில்  தேர்தல் நடைபெறவுள்ளது.

நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கும் பட்சத்தில் இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் ஏற்படும். தேர்ந்தெடுக்கப்படாத ஒரு கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டால் எப்படி நன்மை நடக்கும்' என்றார்.

மேலும், 'மக்களிடத்தில் அதிகப்படியான பொய்யாக பேசி மக்களை திசைதிருப்பி வாக்கு சேகரித்து வருகிறார் ஸ்டாலின்.
எதிர்க் கட்சியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ஆளும் கட்சியாக இருந்தால் செய்யக்கூடியதை மட்டும் தான் பேச முடியும். மக்களுக்கு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் தான் மக்களிடத்தில் பேசுவோம்.

பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிற மாதிரி  ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் அத்தனையும் பொய். தைத்திருநாள் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது அதிமுக அரசு. இதை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின். தேர்தல் முடிந்த பின்பு அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உறுதி' என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP