காங்கிரசுக்கு பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்திப்பது குழி பறிக்கும் செயல் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.
 | 

காங்கிரசுக்கு பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்திப்பது குழி பறிக்கும் செயல் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின்,தற்போது சந்திரசேகர் ராவை சந்திப்பது குழி பறிக்கும் செயல். 4-வது அணி அல்ல, 5-வது அணி அமைந்தாலும் ஸ்டாலின் பேச்சுவார்த்தி நடத்துவார். ஸ்டாலினுக்கென்று தனி கொள்கை கிடையாது; அரசியல் நாடகம் செய்கிறார். சந்திரசேகர் ராவ் உடனான ஸ்டாலின் சந்திப்பு காங்கிரசுக்கு செய்யும் பச்சை துரோகம்’ என்றார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். 3-வது அணி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP