மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர்- சந்திரபாபு நாயுடு புகழாரம்!

பா.ஜ.கவுக்கு எதிரான அணியில் இணைய தி.மு.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார். உண்மையில் மோடியை விட சிறந்தவர் ஸ்டாலின் என சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். 

அப்போது ஸ்டாலின் பேசுகையில், "மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்கு வரவேற்பு அளித்து ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக நாங்கள் இணைந்துள்ளோம். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசிக்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் நான் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளேன்" என்றார். 

மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர்-  சந்திரபாபு நாயுடு புகழாரம்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், "பா.ஜ.கவுக்கு எதிரான அணியில் இணைய தி.மு.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் எங்களுடன் இணைவதாக தெரிவித்துள்ளார். மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர். என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

சிபிஐ, ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் போன்ற தன்னிச்சையான அமைப்புகளிலும் பா.ஜ.க தலையிடுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. எனவே இத்தகைய அரசை வீழ்த்த நாம் ஒன்றாக இணைய வேண்டும். காங்கிரசுடன் வேறுபாடு இருந்தாலும், ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். அடுத்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இருக்கிறேன்" என்று கூறினார். 

மேலும், தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? எங்கே இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP