மல்லுக்கட்டும் மாவட்ட செயலாளர்கள்... தலைவலியில் ஸ்டாலின்!

தி.மு.க மாவட்டச்செயலாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதிய தலைவலி உருவாகி இருக்கிறது.
 | 

மல்லுக்கட்டும் மாவட்ட செயலாளர்கள்... தலைவலியில் ஸ்டாலின்!

தி.மு.க மாவட்டச்செயலாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதிய தலைவலி உருவாகி இருக்கிறது. 

ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட, தி.மு.க., செயலராக பல ஆண்டுகள் இருந்தவர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... முன்னாள் அமைச்சரான  இவருக்கு, நகமும், சதையுமான நண்பராக இருந்தவர் கணேசன். இவரும், சேர்மன், எம்.எல்.ஏ., பதவிகளில் இருந்திருக்கிறார். நிர்வாக வசதிக்காக, கடலுார் மாவட்டத்தை, மேற்கு, கிழக்கு என பிரித்து, மேற்கில்  கணேசனையும், கிழக்கில், பன்னீர்செல்வத்தையும் மாவட்டச் செயலர்களாக்கினர். அப்போதிலிருந்தே இருவரும் கீரியும், பாம்பும்போல மாறிவிட்டனர். மேற்கு மாவட்டத்தில், சிறிய பதவிகளில் இருக்கிற, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை, கணேசன் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள். இதனால், பன்னீர்செல்வம் தரப்பு, கணேசன் மீது அதிருப்தியில் இருக்கிறது. இந்த விவகாரம் அறிவாலயம் வரை சென்றுள்ளதால் மு.க.ஸ்டாலின் இருவரையும் சமாதனமாகச் செல்லி உத்தரவிட்டிருக்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP