சூலூர் திண்ணை பிரச்சாரத்தில் கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்!

கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம் எண்டுறம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் சூலூர் தொகுதியில் வாக்குசேகரிப்பின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
 | 

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் அவர்களது  பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சூலூர் திண்ணை பிரச்சாரத்தில் கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்!

அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல் உள்ளிட்ட கிராமங்களில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, குடிநீர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, "குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும், கேஸ் விலை குறைக்கப்படும். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது.

சூலூர் திண்ணை பிரச்சாரத்தில் கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்!

அ.தி.மு.க. ஆட்சி எந்த பிரச்சனைகளை பற்றியும் கவனிக்காமல் தங்களை காப்பாற்றிக்கொள்ளவதில் மட்டும் கவனமாக உள்ளது. அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை. பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தலையீடு உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம், கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகியவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்," என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP