18 எம்.எல்.ஏ க்களுக்கு ரூ.180 கோடி கொடுத்த ஸ்டாலின்... அமைச்சரின் புதிய சர்ச்சை!

டி.டி.வி.தினகரன் மூலம் தகுதி நீக்க வழக்கில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.
 | 

18 எம்.எல்.ஏ க்களுக்கு ரூ.180 கோடி கொடுத்த ஸ்டாலின்... அமைச்சரின் புதிய சர்ச்சை!

டி.டி.வி.தினகரன் மூலம் தகுதி நீக்க வழக்கில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன்  ’’தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம். இந்த ஆட்சியை கலைக்கலாம் என்ற நோக்கத்தில் சதிகார வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
செயலற்ற தலைவராக விளங்கி வரும் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் அந்த மக்களை எல்லாம் தூண்டி விட்டு அதில் பல்வேறு விதமான சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை போர்க்களமாக மாற்றி விட்டனர். 18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் மூலமாக கடத்தி சென்று அவர்களுக்கு தலா ரூ.10 கோடி வீதம் 180 கோடி ரூபாயை டி.டி.வி.தினகரன் வழியாக மு.க.ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார்.

ஆசை காட்டி மோசம் செய்து இன்றைக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதற்கு கருவியாக விளங்கியவர் டிடிவி.தினகரன். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வெகு விரைவில் தீர்ப்பு வரும். இடைத்தேர்தல் வரும்.
மு.க.ஸ்டாலின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கும். துரைமுருகனுக்கும் அதிகாரப்போட்டி நடக்கிறது. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு தடைபோடும் வகையில் தி.மு.க விவசாயிகளை தூண்டி விடுகிறது’’ என அவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், போலீஸ் எஸ்.ஐ ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவுடியை மருத்துவமனையில் சந்தித்ததற்கு சமீபத்தில் நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP