ஸ்டாலினுக்கு தர்மசங்கடம்... ரஜினி கட்சிக்கு ஓ.கே சொன்னாரா அழகிரி!?

மு.க.அழகிரியை முற்றிலுமாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர்க்கப்பார்ப்பதால் ரஜினி கட்சியில் இணையும் முடிவுக்கு மு.க.அழகிரி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 | 

ஸ்டாலினுக்கு தர்மசங்கடம்... ரஜினி கட்சிக்கு ஓ.கே சொன்னாரா அழகிரி!?

தி.மு.க-வும் மு.க.ஸ்டாலினும் முற்றிலுமாக  தவிர்த்து வருவதால், ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் இணையும் முடிவுக்கு மு.க.அழகிரி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு துரோகம் செய்ததாக கூறி அழகிரியை கட்சியை விட்டு நிரந்தமாக விலக்கி வைத்து இருக்கிறது தி.மு.க தலைமை. வெளியே தி.மு.க-வுக்கு எதிராக நடப்பது போல காட்டிக்கொண்டாலும் கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு பல வகைகளில் முயற்சித்து வருகிறார் அழகிரி. ஆனால், தி.மு.க தலைமை செவிசாய்க்கவில்லை. 

சமீபத்தில், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கோரி தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்து பெண்கள் ஒன்று கூடி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தாதாக கூறப்படுகிறது. இதனை எதிர்பார்க்காத ஸ்டாலின். அந்தப்பேச்சை விட்டுவிடுங்கள். மறுபடியும் அவரை கழகத்தில் இணைத்துக்கொண்டு கெட்ட பெயரை சம்பாதிக்க விரும்பவில்லை. அவர் வேண்டவே வேண்டாம். வேண்டுமானால், அவருடன் இருக்கும் ஆதரவாளர்களை வரச்சொல்லுங்கள். கட்சியில் சேர்த்துக் கொள்கிறேன். மற்றபடி அவருக்காக மறுபடியும் என்னிடம் வந்து சிபாரிசுக்கு நிற்காதீர்கள் என கறாராக சொல்லிவிட்டாராம். 

இருப்பினும், மு.க.அழகிரியின் மனைவி, காந்தி அழகிரி ஸ்டாலினுக்கு போன்போட்டு, கட்சியில் சேர்த்துக்கொள்ளும்மாறு தொடர்ந்து நச்சரித்து வந்திருக்கிறார். ஆனால், அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லையாம் ஸ்டாலின். அழகிரிக்காக யாரும் பரிந்து பேசினால், கோபத்தில் கண் சிவக்கிறாராம் ஸ்டாலின். 

அதேநேரத்தில் தொடர்ந்து தி.மு.க, ஸ்டாலினுக்கு எதிராக பேசி வரும் அழகிரி, இனியும் காத்திருந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். கடந்த பல மாதங்களாக அவரது ஆதரவாளர்கள் அழைத்தும் எந்த விழாவிலும் பங்கேற்காத அழகிரி, சில தினங்களுக்கு முன் மதுரை முன்னாள் மேயராக இருந்த மன்னன் இல்ல திருமணவிழாவில் பங்கேற்றார். அந்த விழாவிற்காக அச்சடிக்கப்பட்டிருந்த விளம்பரங்களில் அழகிரியின் படங்கள் பிரதானப்படுத்தப்பட்டு பல நாட்களுக்கு பிறகு மதுரை முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு அழகிரி வந்து இறங்கியதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம் ஆங்காங்கே ஆர்ப்பரித்தது. திருமண அரங்கில் பாடகர் மனோ ரஜினி பாட்டாக பட்டைய கிளப்பினார்.

ஸ்டாலினுக்கு தர்மசங்கடம்... ரஜினி கட்சிக்கு ஓ.கே சொன்னாரா அழகிரி!?

அங்கு பேசிய அழகிரி, ”வருகிற தேர்தலில் எங்கள் பலம் என்னவென்று எல்லோருக்கும் காண்பிப்போம். தற்போது தி.மு.க-வில் உள்ளவர்கள் அனைவரும் பதவிக்காகவே கட்சியில் இருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும் போது யார் கட்சியில் இருப்பார்கள், யார் பதவியில் இருப்பார்கள் என்பது தெரியும். அதுவரை பொறுத்திருங்கள்.  நான் அரசியல் இப்ப பேச வேண்டாம் இன்னும் ஒரு வருடம் இருக்கு அதுவரை பொறுமையா இருப்போம் என்று நினைத்திருந்தேன் ஆனா பேசவச்சுட்டாங்க’’ எனப்பேசியது மேலும் ஸ்டாலினை கோபப்படுத்தி விட்டதாம்.

அதோடு மட்டுமல்லாமல், தற்போது கட்சி பதவியில் உள்ள தி.மு.க-காரர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டு அழகிரியை சந்தித்து பேசினார்களாம். இந்த சந்திப்பை புகைப்படத்துடன் எடுத்து ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறாராம் ஸ்டாலின். 

போட்டோ எடுத்து அனுப்பியது யார்? என அழகிரி தரப்பும் விசாரணையில் இறங்கி உள்ளது. இதனால், தொடர்ந்து தான் அவமானத்துக்கு உள்ளாவதாக நினைத்த அழகிரி விரைவில் ரஜினி கட்சியில் இணைந்து விடுவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். ஏற்கெனவே ரஜினியுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார் அழகிரி. பல முறை ரஜினியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த பிறகு கூட ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப்பேசி வந்தார் அழகிரி. மற்றொரு புறம் பா.ஜ.க தொண்டர்கள் அழகிரி வீட்டை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.ஸ்டாலினுக்கு தர்மசங்கடம்... ரஜினி கட்சிக்கு ஓ.கே சொன்னாரா அழகிரி!?
இப்போதைக்கு மீண்டும் ஸ்டாலினிடம் போய் கெஞ்ச வேண்டாம் என்கிற தீர்க்கமான முடிவில் அழகிரி இருப்பதாக  அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP