மக்களுக்கு எதுவும் செய்யாததால் ஸ்டாலின் பேசமாட்டார்: முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சியில் செய்யாததால் திட்டங்கள் பற்றி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசமாட்டார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

மக்களுக்கு எதுவும் செய்யாததால் ஸ்டாலின் பேசமாட்டார்: முதல்வர் பழனிசாமி

'திமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால், மக்கள் நலத் திட்டங்கள் பற்றி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசமாட்டார்' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர், மோகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட, முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘தேர்தல் மூலம் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். சுயநலத்திற்காகவும் பேராசையிலும் சிலர் வழிதவறிச் சென்றார்கள். 88 திமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட என்னிடம் கோரிக்கை மனு அளித்தது இல்லை’ என்றார்.

மேலும், '248 குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைக்க ரூ.106 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கவும், ஒட்டப்பிடாரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றவும்,  ஒட்டப்பிடாரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் எதுவும் செய்யாததால், அது பற்றி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசமாட்டார்' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP