ஸ்டாலின் ஜனாதிபதியாவார்: முதல்வர் பழனிசாமி கிண்டல்

’ஸ்டாலின் முதல்வராகமாட்டார், ஜனாதிபதியாகத்தான் ஆவார் என துரைமுருகனே கூறியுள்ளார்’ என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் ஜனாதிபதியாவார்: முதல்வர் பழனிசாமி கிண்டல்

’ஸ்டாலின் முதல்வராகமாட்டார், ஜனாதிபதியாகத்தான் ஆவார் என துரைமுருகனே கூறியுள்ளார்’ என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தருவைக்குளத்தில் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ‘ஸ்டாலின் முதல்வராகமாட்டார், ஜனாதிபதியாகத்தான் ஆவார் என துரைமுருகனே கூறியுள்ளார். இன்னும் 25 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என சொன்னவர் துரைமுருகன்’ என்று பேசினார்.

மேலும், ’தருவைக்குளத்தில் ஆரம்ப சுகாதார  நிலையம் அமைத்து தரப்படும். திண்ணை பிரச்சாரத்தின்போது வாங்கிய மனுக்களை ஸ்டாலின் யாரிடம் கொடுப்பார்?’ என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP