'நானும் ரவுடிதான்' என்பதைப் போல ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

நானும் ரவுடிதான் என்பதை போல தி.மு.க தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் மறந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.
 | 

'நானும் ரவுடிதான்' என்பதைப் போல ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

நானும் ரவுடிதான் என்பதை போல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "தி.மு.கவிற்கு அரசியல் பண்பாடும், நாகரீகமும் கொஞ்சம் கூட கிடையாது. தி.மு.க பதவி வெறியுடனும், ஆதங்கத்துடனும் இருப்பது ஸ்டாலினின் செயல்பாட்டிலே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. 2011-16 ஆண்டுகளில் நடந்த எந்த அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும் மாற்று கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெற்றதில்லை

'ஏதோ நானும் ரவுடிதான்' என்ற அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் மறந்துவிடக் கூடாது. 

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அ.தி.மு.க அமைச்சர்கள் நாவடக்கத்துடன் உள்ளனர். ஆனால் தி.மு.க அமைச்சர்களுக்கு அதுபோன்று இல்லை" என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP