தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது அத்துமீறல் செயலாகும்: ராமதாஸ்

வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது அத்துமீறல் செயல் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 | 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களும், அட்டகாசமும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை. முடிவு கட்டப்பட வேண்டியவை.  

கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அவ்வாறு இருக்கும்போது கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது அத்துமீறலாகும்.

இலங்கை அரசு தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் ஒரு பெரிய அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில், கச்சத்தீவை மீட்கவும், மீனவர்கள் நலன்காக்க தனி அமைச்சகத்தை அமைக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி நடவடிக்கை எடுக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ராமதாஸின் அறிக்கை:-

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது அத்துமீறல் செயலாகும்: ராமதாஸ்தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது அத்துமீறல் செயலாகும்: ராமதாஸ்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP