லண்டனில் முதலமைச்சர் முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

லண்டனில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
 | 

லண்டனில் முதலமைச்சர் முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

லண்டனில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு பயணம் செய்யவுள்ள முதலமைச்சர் இன்று லண்டனிற்கு சென்றபோது, அங்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தன.

இந்த நிலையில், சர்வேதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணி தரத்தினை மேம்படுத்திவிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும், மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தவும், அந்த நோய்களை கையாளும் வழிமுறைகளை அறியவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோது முதலமைச்சர் பழனிசாமி கோட் சூட் அணிந்திருந்தார். முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கோட் சூட் உடன் இருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP