ஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்!

ஒரே ஓட்டலில் தினகரனுடன், மு.க.ஸ்டாலின் தங்கியது உண்மை என அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க. தமிழ்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளதாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 | 

ஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்!

டி.டி.வி.தினகரனுடன்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுக இணக்கத்தில் உள்ளதாக எடப்பாடி அணியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே ஓட்டலில் தினகரனுடன், மு.க.ஸ்டாலின் தங்கியது உண்மை என அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க. தமிழ்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளதாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்!

ஒரே ஓட்டலில் தினகரனும் ஸ்டாலினும் த தங்கியது உண்மை: தங்க.தமிழ்செல்வன் ஒப்புதல் என்னும் தலைப்பில் இன்று நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில், ’’மதுரை பப்பீஸ் ஓட்டலில், மு.க.ஸ்டாலினு, டி.டி.வி.தினகரனும் தங்கியிருந்தது உண்மை தான் என்று அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க. தமிழ்ச்செல்வன் ஒப்புக்கொண்டுள்ளார். மதுரை பப்பீஸ் ஓட்டலில்தான் தினகரன் வழக்கமாகத் தங்குவார். அதுபோலவே மதுரை சென்றால் மு.க.ஸ்டாலின் வழக்கமாக தங்குவது சங்கம் ஓட்டல் தான். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த முறை மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் தங்கியிருந்த பப்பீஸ் ஓட்டலில் தங்கினார். 

ஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்!

அப்போது ஸ்டாலினும், தினகரனும் சந்தித்துக் கொண்டதாகவும், சில பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில்லை என, முடிவெடுக்கப்பட்டதாகவும், நமது அம்மாவில் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தங்க தமிழ்செல்வனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தங்க. தமிழ்செல்வன் இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

ஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்!

பரிவர்த்தனை நடந்தது பற்றி கேட்டதற்கு, நமது அம்மா கட்சி நாளிதழ். அதனால் அப்படி செய்தி வெளியிட்டிருப்பார்கள். மற்ற பத்திரிக்கைகளில் செய்தி வந்தால் என்னிடம் கேளுங்கள்’ என்று பதிலளித்தார். ஆக தினகரனும், ஸ்டாலினும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததும், இருவருக்கும் இடையே பரிவர்த்தனை நடந்ததாகவும் நமது அம்மா வெளியிட்ட செய்தி உண்மைதான் என இப்போது அம்பலமாகி இருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலினுடன், டி.டி.வி.தினகரன் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அதிமுக-வினரும், நமது அம்மா நாளிதழும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 
   newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP