வெட்கமாக இருக்கிறது...ஸ்டாலின் உருக்கம்..!

‘நான் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தேன் என்பதை நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, என்னைப்பற்றிய உண்மையான கருத்துக்களை தைரியமாக கூறியுள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் பிடி அரசகுமர்’ என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
 | 

வெட்கமாக இருக்கிறது...ஸ்டாலின் உருக்கம்..!

‘நான் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தேன் என்பதை நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, என்னைப்பற்றிய உண்மையான கருத்துக்களை தைரியமாக கூறியுள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் பிடி அரசகுமர்’ என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பெரியண்ணன் அரசு இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் மணமக்கள் அபிநயா (எம்எல்ஏவின் மகள்) பிரபு உள்ளிட்டோருக்கு சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் முன்னாள் கொறடாவுமான பெரியண்ணணின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  ம.சுப்பிரமணியன், துரை சந்திரசேகரன், மெய்யநாதன், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுமான கே.என் நேரு, ரகுபதி, பெரியகருப்பண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்:-

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் என்னைப் பற்றியும் உண்மைகளை வெளிப்படையாக அதேவேளையில் துணிச்சலாக அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசியுள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் பிடி.அரசகுமார், மிசா சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள், மிசாவில் நான் சிறையில் இருந்தேன் என்பதை நானே சொல்வது எனக்கு வெட்கமாக  இருக்கிறது, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்த முதல்வர் பழனிச்சாமி பேசும்போது 39 தொகுதிகளிலும் திமுக மிட்டாய் குறித்து வெற்றி பெற்றதார தவறாக பேசுகிறார்.

அப்படி என்றால் இரு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக மிட்டாய் கொடுத்தா வெற்றி பெற்றது. அதேபோல் தேனி நாடாளுமன்றத் தொகுதியிலும் அதிமுக மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில்:
 

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக நீதிமன்றத்திற்கு போனது உண்மைதான், ஏன் என்றால் இடஒதுக்கீடு சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதற்காக, ஆனால் நீதிமன்றம் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஒரு போதும் நீதிமன்றத்தை நாடவில்லை, தற்போதும் கூட புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வரைமுறையை செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் திமுக சார்பில் முறையிடப்பட்டுள்ளது, ஆனால் முதல்வர் பழனிச்சாமி பேசும் போது ஸ்டாலின் தான் தேர்தலை நிறுத்த திட்டமிடுகிறார் என பொய் சொல்கிறார். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு ஒருபோதும் கிடையாது.

89ஆம் ஆண்டு  நானும் ஸ்டாலினும் எம்எல்ஏவாக ஆனோம் ஆனால்  நான் முதல்வராகிவிட்டேன் என ஸ்டாலினால் ஆகமுடியவில்லை என முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கூறிவருகிறார். மண் புழுவைப்போல் நெழிந்து போய் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கலைஞரின் மகன், ஒர போதும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்று ஸ்டாலின் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP