பரபரப்பு செய்தி...வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 | 

பரபரப்பு செய்தி...வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய ஏப்ரல் 14-ஆம் தேதி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. 
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புத்தல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அவரின் ஒப்புதலை தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கடந்த 30ஆம் தேதியன்று திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்து, அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை தகவல் தெரிவித்த தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி சரண், "வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத்திலிருந்து ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவை எடுக்கும்" என்று கூறினார். 

இதையடுத்து, வேலூரில் கட்டுகாட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், அங்கு தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளது. எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக இன்று காலை முதலே தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து அதிகாரபூர்வமற்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP