தங்க.தமிழ்செல்வனை சந்திக்க மறுத்த சசிகலா.. எடப்பாடியை திணறடிக்கும் தினகரன்!

டிடிவி தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை சந்தித்து புகார் அளிக்க பெங்களூர் சென்றதாகவும், சசிகலா அவரை சந்திக்க மறுத்ததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரனை ரகசியமாக சந்தித்தித்ததாகவும் கூறப்படுகிறது.
 | 

தங்க.தமிழ்செல்வனை சந்திக்க மறுத்த சசிகலா.. எடப்பாடியை திணறடிக்கும் தினகரன்!

டிடிவி தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை சந்தித்து புகார் அளிக்க பெங்களூர் சென்றதாகவும், சசிகலா அவரை சந்திக்க மறுத்ததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரனை ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

தினகரனுக்குத் தெரிவிக்காமல் கடந்த இரண்டு நாள்களாக பெங்களூரில் முகாமிட்டிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். கர்நாடக அமமுக செயலாளர் புகழேந்தி மூலம் சசிகலாவைச் சந்திக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார் தங்க தமிழ்செல்வன். ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலோ 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கிலோ எந்த சந்தேகம் இருந்தாலும் தினகரனிடம்தான் ஆலோசனை பெற வேண்டும். ` தினகரன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்' என சசிகலாவும் உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால், அவரிடம்கூட சொல்லாமல் தங்க தமிழ்ச்செல்வன் பெங்களூருக்குப் பயணப்பட்டதை தினகரன் ரசிக்கவில்லை’’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். 

இதனால், தங்க தமிழ்செல்வன் மீதான கோபம் இன்னும் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி விவேக் நுழைந்ததாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க,  தமிழ்செல்வனுடன் எடப்பாடி அணியினர் தொடர்ந்து பேசி வருவதும் தினகரனுக்கு தெரிய வந்துள்ளது. தங்க தமிழ்செல்வன் சென்றால் அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 4 எம்.எல்.ஏக்கள் செல்லத்தயாராக இருப்பதையும் தினகரன் அறிந்து வைத்துள்ளாராம்.  இதனால், அவர் பொறுமை காட்டி வருவதாக கூறப்படுகிறது.

.தங்க.தமிழ்செல்வனை சந்திக்க மறுத்த சசிகலா.. எடப்பாடியை திணறடிக்கும் தினகரன்!
தம் அணியில் எடப்பாடி டீம் குழப்பம் விளைவிப்பதை தினகரன் விரும்பவில்லை. அதே நேரத்தில் எதிரணிக்கும் கடிவாளம் போட்டு திணற வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அணியில் இருப்பவர்களையே கண்காணிப்பதில் கவனம் செலுத்துவார்கள். நமது அணி ஆதரவாளர்களை குறிவைப்பதையும் நிறுத்திக் கொள்வார்கள் என்கிற முடிவுக்கு வந்த தினகரன்,  எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறாராம். 

சமீபத்தில் குற்றாலம் சென்ற அவர், எடப்பாடி அணி எம்ல்.எல்.ஏக்கள் நான்கு பேரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி அணி குழப்பத்தில் மூழ்கி தமது அணியினருக்கு தூண்டில் போடாது என்பது தினகரனின் கணக்கு. 

இதுகுறித்து எடப்பாடி அணி ஆதரவாளர்களிடம் கேட்டால், ‘’அந்தச் சந்திப்பு உண்மை இல்லை. தினகரனை நம்பி போய் பதவி இழந்ததுதான் மிச்சம் என அவர் பக்கம் இருக்கும் 18 எம்.எல்.ஏக்களும் தவித்து வருகிறார்கள். அவர்களில் பாதிப்பேர் பதவிக்காக அணி மாறத் தயாராகி வருகின்றனர். அப்படி இருக்கும்போது பதவியை அனுபவித்து வரும் எங்கள் அணி எம்.எல்.ஏக்கள் தினகரனை ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுவது கட்டுக்கதை. வதந்தியை கிளப்பி விட்டு எதிரணியை திணற வைக்க தினகரனின் சிறுபிள்ளைத்தனமான ஐடியா இது’’ என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP