சேலம்: மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பேரணி !

ரவுடிகளின் அட்டகாசம் அதிகம் உள்ள பகுதிகளில், பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வாக்களிக்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு அணிவகுப்பு பேரணியல் ஈடுபட்டனர்.
 | 

சேலம்: மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பேரணி !

சேலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகம் உள்ள பகுதிகளில், பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வாக்களிக்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு அணிவகுப்பு பேரணியல் ஈடுபட்டனர். 

நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான வாக்குபதிவு அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாநகர பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. 

பேரணியை சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில், சேலம் மாநகர துணை ஆணையர்கள் சியாமளா தேவி, தங்கதுரை உள்பட 92 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாநகர காவல் துறையினர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.  சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது கிச்சிபாளையம், திருச்சி மெயின் ரோடு வழியாக கோட்டை மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP