ரூ. 40000,00,00,000 சொத்து... ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி அதிரடி குடைச்சல்!

ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளை சொத்துக்களை முக.ஸ்டாலின் குடும்பத்தினர் அபகரிக்க முயற்சிப்பதை தடுக்க மு.க.அழகிரி அதிரடி திட்டத்தை கையெலடுக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 | 

ரூ. 40000,00,00,000 சொத்து...  ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி அதிரடி குடைச்சல்!

அதிரடி  அரசியல் செய்து வந்த மு.க.அழகிரி அமைதியாகிக் கிடக்கிறார். அடுத்து என்ன? எனக் கேட்டால் தேர்தலுக்காக அழகிரி காத்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆட்டம் காட்டப்போவது உறுதி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  

கருணாநிதி மறைந்தபிறகு மீண்டும் கட்சிக்குள் நுழைய முயற்சி எடுத்தார். முயற்சி சவால் ஆனது. சவால் மிரட்டல் ஆனது. மிரட்டல் கெஞ்சலானது. கெஞ்சல் இப்போது அமைதியாகிக் கிடக்கிறது. மீண்டும் அரசியலுக்குள் நுழைய விருப்பமோ, எண்ணமோ, திட்டமோ எதுவுமே இல்லையா? அடுத்தது என்ன அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தோம். ’’கோபாலபுரம் வீட்டில் உள்ள தயாளு அம்மாவைச் சந்திப்பதற்காக மட்டுமே அவ்வப்போது வந்து சென்னை செல்கிறார் மு.க.அழகிரி. அமைதியாகி விட்டார் என யாரும் கருத வேண்டாம். அடிப்படையான சில வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.

ரூ. 40000,00,00,000 சொத்து...  ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி அதிரடி குடைச்சல்!

அழகிரி கட்சிக்குத் திரும்ப ஸ்டாலினைத் தவிர அவரது குடும்பத்தினர் அனைவரது ஆதரவும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலினுக்கு பயம். காரணம் 40 ஆயிரம் கோடி அறக்கட்டளை சொத்துக்கள் முறையற்ற வகையில் செலவு செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் பலவகைகளில் வரக் கூடிய பணத்தை முரசொலி அறக்கட்டளை வரவில் வைத்துக்கொண்டனர். இப்போது 10 ஆயிர கோடி பணம் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக இருக்கிறது. இப்போது முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கும் உதயநிதி இந்தப் பணத்தை கையாண்டு வருகிறார். அவர் படமெடுப்பதெல்லாம் இந்தப்பணத்தில் இருந்து தான்.  

ரூ. 40000,00,00,000 சொத்து...  ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி அதிரடி குடைச்சல்!

இந்த அறக்கட்டளை நிர்வாகத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வட்டிக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொண்டால் இந்தக் கணக்குகளை கேட்பார் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் முதல்கட்டமாக கழகத்தில் தனக்கு பொருளாளர் பதவியை கேட்டு வந்தார் அழகிரி. தனக்கு கட்சியில் பொறுப்பு வேண்டாம். முரசொலி அறக்கட்டளையில் தனது மகன்  இதையெல்லாம் உணர்ந்து கொண்ட எ.வ.வேலுதான், அழகிரியை கட்சிக்குள் சேர்க்கக் கூடாது என ஸ்டாலின் மனதை அடக்கி வைக்கக் காரணமாக இருந்து வருகிறார். தி.மு.க பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் எப்படியும் தான் பொருளாளர் ஆகி விட வேண்டும் பல வகைகளிலும் எ.வ.வேலு முயற்சி எடுத்து வந்தார். ஆனால், முடியவில்லை. 

ரூ. 40000,00,00,000 சொத்து...  ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி அதிரடி குடைச்சல்!

ஏற்கெனவே முரசொலி அறக்கட்டளை உறுப்பினர்களாக கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். தயாளு அம்மாள், கனிமொழி, கலாநிதி, தயாநிதி, உதயநிதி, மு.க.தமிழரசு, அழகிரி, க்ருத்திகா உதயநிதி, அனுஷா தயாநிதி ஆகியோர் 2008 முதல் 2011ம் ஆண்டு வரை இருந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு அறக்கட்டளையில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு, கலாநிதி, தயாநிதி, மு.க.தமிழரசு, அனுஷா உதயநிதி, தயாளு அம்மாள் ஆகியோர் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆகையால், மு.க.அழகிரிக்கு முரசொலி அறக்கட்டளை விவரங்கள் அனைத்தும் அழகிரிக்கு அத்துபடி. உதயநிதி முரசொலி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு வந்தவுடன் கருணாநிதி குடும்பத்தையும் தாண்டி எ.வ.வேலு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 

ரூ. 40000,00,00,000 சொத்து...  ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி அதிரடி குடைச்சல்!

அழகிரி கட்சியில் இல்லாவிட்டாலும், அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் சில விசுவாசிகள் முரசொலி அறக்கட்டளையில் நடப்பதை அழகிரியிடம் ரகசியமாக பகிர்ந்து வருகிறார்கள். இந்தக் கணக்கு வழக்குகளை எல்லாம் விரைவில் பொதுவெளிக்கு கொண்டு வந்து அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆக மொத்தத்தில் ஸ்டாலினுக்கு எதிரான யுத்தத்திற்கு மீண்டும் கூர்தீட்டி வருகிறார் மு.க.அழகிரி. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP