தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி:  மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

தமிழகத்திற்கு கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் கோரிக்கை வைத்தேன் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் இன்று மாநில உணவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  அமைச்சர் காமராஜ், ‘தமிழகத்திற்கு கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு மாதத்திற்கு 23,035 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்’ என்றார்.

மேலும், ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் அனைத்தும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP