காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் மே 25 என்கிற புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது பாமகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் என்பதால் பாமக விரைவில் பிளவுபட இருப்பதாகக் கூறப்படுகிறது.
 | 

காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் மே 25 என்கிற புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது பாமகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் என்பதால் பாமக விரைவில் பிளவுபட இருப்பதாகக் கூறப்படுகிறது. 


தனது அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் காடுவெட்டி குரு. பா.ம.க கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பேச்சுகளைவிட குருவின் பேச்சையே ஆரவாரத்துடன் ரசிப்பார்கள் பா.ம.க.,னர். அப்படிப்பட்ட குரு கடந்த மே 15ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தது அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில், காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கடனில் சிக்கித்தவிப்பதாகவும், கடனை அடைக்க குரு பயன்படுத்திய வேனை விற்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதில், குருவின் வங்கி ஸ்டேட்மெண்ட், உள்ளிட்ட புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இந்த பதிவை வெளியிட்டது குருவின் அக்காள் மகன் சிவா என்பதும் தெரிய வந்தது. அவரிடம் பேசினால், ’’மாமாவின் குடும்பம் கடனில் சிக்கியிருப்பது உண்மைதான். இதுகுறித்து உங்களிடம் இன்னும் சில நாட்களில் விளக்கமாக பேசுகிறேன். மேற்கொண்டு இப்போதைக்கு வேண்டாம்’’என நிறுத்திக்கொண்டார்.

 காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?
குருவின் ஆதரவாளர்களிடம் பேசினால், ’’முன்பு குருவின் பேச்சு பாமகவுக்கு பலம் கூட்டியது. ஆனால், இறுதி காலத்தில் அவருக்கு பாமகவால் எந்தப்பலனும் இல்லை. மறைவுக்கு பிறகு குருவின் குடும்பம் கடனில் தவிக்கிறது. ஆனாலும், அவரது குடும்பத்தை பாமக கண்டுகொள்வதாகத் தெரியவில்லை’’என்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ‘நுரையீரல் மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிப்பு நோயால்’ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இரு முறை அறுவைச்சிகிச்சை நடந்தும் பலனளிக்கவில்லை.  அவரிடம் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லை. இத்தனை ஆண்டுகாலம் கட்சிக்கு உழைத்தார். கட்சிக்காக எத்தனையோ வழக்குகளை சந்தித்து சிறை சென்றுள்ளார். ஆனால் இறுதி காலத்தில் அவரை கண்டுகொள்ள யாருமில்லை. பணம் மட்டும் இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும்’’ என்கிறார்கள் குருவின் உறவினர்கள்.

காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

பாமக உதவிக்கு வராதது ஏன்..?
’’குரு நலமாக இருக்கும்போதே பாமக தலைமை அவரை ஒதுக்கி வைக்க முடிவு செய்திருந்தது. முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்ட பிறகு, பா.ம.க.,வை அனைத்துச் சமுதாய மக்களுக்குமான இயக்கமாக மாற்ற வேண்டும் என அன்புமணி கடும் முயற்சி செய்தார். ஆனால், காடு வெட்டி குருவோ, ‘வன்னியர் ஓட்டு அந்நியர்களுக்கு இல்லை’ எனத் தொடர்ந்து பேசி வந்தார். முழுக்க முழுக்க வன்னியர் சாதி இளைஞர்களை மட்டுமே குரு நம்பிக் கொண்டிருந்தார்.

காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

இது, அன்புமணிக்கும், குருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வன்னிய இளைஞர்கள் மத்தியில் குருவுக்குப் பெரும் ஆதரவு இருந்தது. அன்புமணிக்கு அவரளவுக்கு இல்லை. இந்த நிலையில், ஃப்ளக்ஸ் மற்றும் பேனர்களில் குருவின் படங்களை அன்புமணி ஆதரவாளர்கள் தவிர்த்து வந்தனர். 

கட்சியின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் மாவீரன் குரு. ஆனால், சில விஷமிகள் அவரின் வளர்ச்சியைப் பிடிக்காமல், அவரை ஓரங்கட்ட நினைத்தார்கள். அவரைத் தவிர வேறு யாராலும் வன்னியர் சங்கத்தை இவ்வளவு சிறப்பாக எழுச்சிப் பாதைக்குக் கொண்டு வந்திருக்க முடியாது. அவர் உயிருடன் இருக்கும்போதே கட்சியிலிருந்து அவரை ஓரங்கட்ட நினைத்தனர். அதற்குள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தபோது ஒதுக்கி வைக்க நினைத்தவர்கள், குரு இறந்தபோது ’எனது மூத்த மகனை இழந்துவிட்டேன்’ என உருகித்தவித்தனர். உண்மையில் குரு மீது மரியாதை வைத்திருந்தால், கடனில் தவிக்கும் அவரது குடும்பத்தை மீட்கலாமே..?’’ என்கிறார்கள். 

 ’’மாவீரன் அவர்களின் புகழுக்கும்,பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக சிலர் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த 15-ம் தேதி காடுவெட்டியில் நடைபெற்ற மாவீரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மாவீரன் அவர்களின் வீட்டுக்கடன், வங்கிக் கடன்களையும், குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மருத்துவர் அய்யாவும், சின்ன அய்யாவும் அறிவித்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.. கண்டிப்பாக செய்வார்கள்’’ என உறுதி கூறுகிறார் பாமக மாநில துணைச் செயலாளரான வைத்தி.

காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

இதெல்லாம் கண் துடைப்பு. இப்படி அவர்கள் வாக்குறுதி அளிக்கவும் காரணம் இருக்கிறது. குருவின் மறைவை அடுத்து, திருப்பூர், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில்  வன்னியர் சாதி சங்கம் சார்பில் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் ராமதாஸே நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் அரங்கேறியது. குருவின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்த அவரது ஜாதி இளைஞர்கள், குருவின் மகனான கனல் அரசனை திறந்த வேனின் அழைத்து வந்தனர். 

அங்கே ’’எங்களின் அடுத்த மாவீரன் குரு என கோஷங்கள் எழுப்பினர். அப்போதுதான் பாமக நிறுவனர் ராமதாசுக்கு இணையான செல்வாக்கு குருவுக்கு இருந்திருப்பதை தந்தையும் மகனும் உணர்ந்தனர். குருவின் மகன் கனல் அரசனை வன்னியர் ஜாதிக்கு தலைவனாக உருவாக்கி விடுவார்களோ என்கிற பதற்றம் அவர்கள் கண்களில் தெரிந்தது. பாமகவின் ஆணிவேராக இருந்த ஜெ.குருவின் மகன் கனல் அரசனை பாமக அதிருதி தொண்டர்கள் எங்கே தலைவனாக உருவாக்கி விடுவார்களோ என்கிற எண்ணத்தில் அவர்கள் குருவின் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்வதாக அறிவித்து விட்டு போயிருக்கிறார்கள். இது வெறும் கண்துடைப்பு. குரு உயிரோடு இருக்கும்போதே அவரை விலக்கி வைக்க நினைத்தனர். அவர் சிகிச்சைக்காக உதவிகளைக்கூட செய்யாத இவர்களா குடும்பக்கடனை அடைக்கப்போகிறார்கள்’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர் குருவின் ஆதரவாளர்கள். 

காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் துயரம் மே 17, 2009-ல் முடிவுற்றதை கொண்டு, தமிழகத்தில் மே17 என்கிற அமைப்பை இளைஞர்கள் உருவாக்கியது போல, குருவின் மறைவு தினமான மே 25-ஐ நினைவு கூர்ந்து அவர் விட்ட அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காக மே 25 என் கிற அமைப்பை உருவாக்கி வருகிறார்கள் குருவின் ஆதரவாளர்களான வன்னியர் இளைஞர்கள். கனல் அரசனை முன்னிலைப்படுத்தி தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம், மாற்று கட்சியில் இருக்கும் வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனராம்.

 காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக?

மருத்துவர் ராமதாஸுடன் குரு மகன் கனல் அரசன்

இந்த இயக்கம் குறித்து பேசிய பாமகவினர் ‘’ சில விஷமிகள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். கனல் அரசனுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதனை மருத்துவர் அய்யா பார்த்துக்கொள்வார். முதிர்ச்சியும், அனுபவுமும் இல்லாத ஒரு இளைஞனை இயக்கம், போராட்டம் என பாதை காட்டுவது அவரது எதிர்காலத்தை சீரமைக்க உதவாது. அனல் அரசனை அய்யா அவர்கள் மருத்துவருக்கு இணையான வேலையில் அமர்த்தி அழகு பார்க்க நினைக்கிறார்’’ என்கிறார்கள். ’’இயக்கத்தை வளர்த்தெடுத்த குருவின் உயிரை காப்பாற்ற முன் வராதவர்களால் கனல் அரசனுக்கு எந்த நன்மை செய்யப்போகிறார்கள்..? இனியும் அவர்களை நம்பி ஏமாறத் தயாராக இல்லை’ என்கிறார்கள் மே -25 இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

ஆக, குரு வளர்த்த பாமக அவரது மகனால் உடைபடப்போகிறது..!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP