‘ரஜினியின் குரல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது’

காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

‘ரஜினியின் குரல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது’

காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், ‘பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா குறித்த நடிகர் ரஜினிகாந்தின் குரல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் உண்மை நிலையை அறிந்து, ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். அரசின் அனைத்து திட்டத்தையும் ரஜினி ஆதரிக்கவில்லை; புதிய கல்விக் கொள்கையை கூட எதிர்த்திருக்கிறார். ஒரு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்பதால் கூட்டணி என முடிவு செய்யக்கூடாது. மிகப்பெரிய பதவியில் இருந்த ப.சிதம்பரம் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்ததில்லை’ என்றார் தமிழிசை.

மேலும், தேசிய சினிமா விருதுகள், நடுவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது; நடுவர்களில் பாஜக இல்லை என்றும், ஏன் தேசிய விருது வழங்கப்படவில்லை என கேள்வி கேட்க வேண்டும், ஆனால் பாஜகவிடம் கேட்கக்கூடாது எனவும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.    

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP