நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்!

நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்!
 | 

நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. ரஜினியின் 167-வது படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  பேசிய இயக்குநர் முருகதாஸ், நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவரின் சாயல் ரஜினிக்கு இருக்காது. ஆனால் ரஜினிகாந்தின் சாயல் ஹிந்தி, தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் உள்ளது என்றார்.

நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்!

அடுத்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், மீண்டும் எல்லோரையும் சீண்டுவதைப் போலவே இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? அவர் நிச்சயமாக பணம் சம்பாதிக்க வரவில்லை. இனி என் தலைவரைப் பற்றி யார் தப்பா பேசினாலும் நான் சும்மாயிருக்க மாட்டேன் என்று சீமானையும் வம்பிழுத்திருந்தார்.

நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்!

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக இறுதியாக பேசிய ரஜினிகாந்த், 'ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது. தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த அரங்கை இசை வெளியீட்டிற்கு கொடுத்ததற்கு நன்றி என்று விழா மேடையில் முற்றிலுமாக அரசியலைத் தவிர்த்திருந்தார்.

நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்!

வரும் டிசம்பர் 12 எனது பிறந்த நாள். எனக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது. நான் எனது 70வது வயதில் நுழைகிறேன். எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். இது ஆடியோ விழா அல்ல. எனது பிறந்த நாள் விழாவாக நினைக்கிறேன். எல்லாவற்றிலும் எதிர்மறை கருத்துகள் அதிகம் பரவுகிறது. அதனால் நாம் அனைவரும் அன்பைப் பரப்பி, நிம்மதியாக வாழ்வோம். அன்புதான் இப்போது தேவை என்று எல்லா அரசியல் கருத்துக்களுக்கும் முற்றுபுள்ளி வைத்து பேசினார். இப்போதைக்கு சர்ச்சைகள் எதுவும் தேவையில்லை என்கிற தெளிவுடன் ரஜினி இருப்பதாக நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவது உறுதி. அதற்கான வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாகவே சத்தமில்லாமல் தமிழகம் முழுக்கவே நடந்து வருகிறது என்கிறார்கள் போயஸ் கார்டனில் இருப்பவர்கள். அடுத்து ரஜினி மூவ் எல்லோருக்குமே அதிரடியாக இருக்கும். தமிழகத்துக்கு தலைவர் வகுத்து வைத்திருக்கிற திட்டங்களை எல்லாம் சொன்னாலே, எங்க தலைவர் தான் முதல்வர் என்று சந்தோஷ கூச்சலிடுகிறார்கள் ரசிகர் மன்றத்தினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP