ஜன.14ல் அரசியல் மேடையில் ரஜினி பேசுகிறார்!  தயாராகும் ரசிகர்கள்!

ஜன.14ல் அரசியல் மேடையில் ரஜினி பேசுகிறார்! தயாராகும் ரசிகர்கள்!
 | 

ஜன.14ல் அரசியல் மேடையில் ரஜினி பேசுகிறார்!  தயாராகும் ரசிகர்கள்!

நாளை பிறக்கப் போகும் புது வருஷத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த புது வருஷத்தில் நிச்சயமாக ரஜினியின் அரசியல் கட்சி பிறந்தே தீரும், தமிழகத்தில் அதிசயம் நிகழ்ந்தே தீரும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி நடைப்பெறும் துக்ளக் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் அழைக்கப்படும் பிரமுகரிடம் காலம் சென்ற நடிகர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சோ கேட்கும் கேள்விகளும், அதற்கு பங்குபெறும் முக்கிய பிரமுகர் மனம் விட்டு பேசும் பேச்சும் சுவாரஸ்யமானவையாக மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருக்கும்.

இந்நிலையில், வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில்,  துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்கவுள்ளார்.
இந்த விழாவில் துக்ளக் மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் விழா மலரைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். தர்பார் படத்தின் ரிலீஸுக்கு பிறகு பொது விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மேடையில் பேச உள்ளது ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா விழா மேடைகளில் ரஜினி பேசும் ஓரிரு அரசியல் வார்த்தைகளையே வாரக் கணக்கில் மீடியாக்கள் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், அரசியல் மேடையில் ரஜினி பேச இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP