ரஜினி கண்டிப்பா அரசியலுக்கு வரணும்! துக்ளக் குருமூர்த்தி!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதால், அவர் அரசியலுக்கு வரவேண்டிது மிக அவசியமான ஒன்று என்ற கருத்தை முன்வைத்துள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.
 | 

ரஜினி கண்டிப்பா அரசியலுக்கு வரணும்! துக்ளக் குருமூர்த்தி!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதால், அவர் அரசியலுக்கு வரவேண்டிது மிக அவசியமான ஒன்று என்ற கருத்தை முன்வைத்துள்ளார் துக்ளக் ஆசிரியர் சுவாமிநாதன் குருமூர்த்தி.

தற்போதைய தமிழகத்தின் நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று என்றும், அவர் வந்தால் தான் இங்கு மாற்றம் ஏற்படும் எனவும் கூறியுள்ளார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான குருமூர்த்தி. பிறரை போல ஆட்சிக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், அவர் தனது ரசிகர் எண்ணிக்கையை வைத்து எப்போதோ ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று கூறிய அவர், பணம் சம்பாதிப்பதற்காக அவர் அரசியலுக்குள் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பெரும் சக்தியாக திமுக இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார் குருமூர்த்தி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP