அரசியல் களம் காணும் ரஜினி; என்ன சொல்கிறார்கள் அ.தி.மு.கவினர்!

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.கவினர் என்ன சொல்கிறார்கள்..
 | 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அ.தி.மு.க உயிரோட்டம் உள்ள கட்சி. அதை யாரும் அழிக்க முடியாது. அவர் பேசியதை முழுமையாக கேட்டபிறகு நான் கருத்து கூறுகிறேன். 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிக்கும் அந்த உரிமை இருக்கிறது. இந்திய பிரஜையாக உள்ள யாரும் தேர்தலில் போட்டியிட அதிகாரம் உள்ளது. 

அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் சிஸ்டம் சரியாக தான் உள்ளது. அப்படியே ஏதாவது இருந்தால் நாங்கள் சரிசெய்து கொள்வோம். 

அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினியின் அரசியல் முடிவால் அ.தி.மு.கவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. மேலும் தமிழகத்தில் ஓராண்டாக எதுவும் சரியில்லை என ரஜினி கூறியது அ.தி.மு.கவை இல்லை, தி.மு.கவாக கூட இருக்கலாமே. எனவே ரஜினி கூறியதை ஊடகங்கள் திசைதிருப்ப வேண்டாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP